பிரான்சில் பயங்கரம்! பெட்ரோல் நிலையத்தில் தனக்கு தானே தீ வைத்து கொளுத்திக் கொண்ட இளைஞர்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த, நபர் ஒருவர் திடீரென்று தனக்கு தானே தீ வைத்துக் கொண்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

பிரான்சின் Ermont நகரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று பகல் உள்ளூர் நேரப்படி 14.00 மணியளவில் 27 வயதுடைய இளைஞன் வந்துள்ளான்.

அப்போது திடீரென்று அந்த இளைஞர் அங்கு இருந்த படியே தன் மீது பெற்றோல் உற்றி பற்றவைத்துள்ளான். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காவல்நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.

உடலில் பாதி எரிந்துவிட்டதால், அந்த இளைஞன் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் தீவிட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், றித்த நபர் முன்னர் சில தடவைகளும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருந்ததாக அவனது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்