தொற்றுநோய் பரவலால் மோசமாக பாதிக்கப்பட்ட பிரான்ஸ்: உலக சுகாதார அமைப்பு தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாடு தட்டம்மை தொற்று பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 37 பேர் தட்டம்மை பாதிப்பினால் பலியாகியிருப்பதாகவும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சுமார் 41,000 பேர் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 24,000 நோய் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

இதன் விளைவாக, உலக சுகாதார அமைப்பு இதுவரை அம்மை நோய்க்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை அழைத்துள்ளது. ஏனெனில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் தடுப்பூசி போடாத 18 பேர் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நோயானது இருமல், தும்மல் மூலம் பரவுவதால் அனைத்து வயதினரையும் எளிதில் தாக்கும். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 2,741 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் MMR தடுப்பூசி போட்டுக் கொண்டதில்லை. எனவே, அவர்களுக்கு தட்டம்மை பாதிப்பு இருந்தால் அது பரவும் என்று கூறப்படுகிறது. மேலும், அது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளை பாதிப்பதாக கூறப்படுகிறது.

பிரான்ஸில் கடந்த ஜூன் மாதத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர் மரணமடைந்தார். இதன் காரணமாக செர்பியா, ரஷ்யா, இத்தாலி, ஜார்ஜிய ஆகிய நாடுகளுடன் சேர்த்து நோய் தொற்று பரவும் மோசமான நாடாக பிரான்ஸ் விளங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இங்குள்ள மக்களிடம் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் தடுப்பூசியை இதுவரை போட்டுக் கொண்டதில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஏனெனில், பிரான்ஸில் தடுப்பூசிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான். இதற்கு உதாரணமாக, கடந்த 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 41 சதவித பிரான்ஸ் மக்கள் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 83 சதவிதம் பேர் தடுப்பூசிக்கு ஆதரவு தருவதாகவும், தற்போது அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளில் 90 சதவிதம் பேருக்கு தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers