பிரான்ஸில் முடிவுக்கு வரும் கோடை விடுமுறை: சாலைகளில் நிரம்பி வழியும் வாகனங்கள்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸில் கோடை விடுமுறை நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து, சுற்றுலாவுக்கு சென்றவர்கள் நாடு திரும்பியதால் சாலைகள் எங்கும் வாகனங்களாக நிறைந்துள்ளன.

பிரான்ஸ் நாட்டில் கோடை விடுமுறையானது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட பலர் நாடு திரும்பியுள்ளனர்.

இதனால், பிரான்ஸின் முக்கிய வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நாட்டின் உள்வரும் சாலைகள் மற்றும் வெளியேறும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அந்தந்த இடங்களும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, Auverhne-Rhone-Alpes மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கும் என்றும், அதனால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், A10 சாலையில் அதிகப்படியான நெரிசல் இருக்கும் என்பதால், அங்கு பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் A6, A7 மற்றும் A9 ஆகிய நெடுஞ்சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers