பிரபல நடிகர் மீது இளம் நடிகை பரபரப்பு பாலியல் புகார்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
187Shares
187Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டின் பிரபல நடிகரான Gerard Depardieu மீது 22 வயதுடைய இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

170 படங்களுக்கு மேல் நடித்தவரும், சிறந்த நடிகருக்கான விருது பெற்றவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவருமான Gerard Depardieu மீது நகைச்சுவை நடிகையும் நடனக் கலைஞருமான அந்த இளம் நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பாரீசிலுள்ள Gerard Depardieuவின் வீடுகளில் ஒன்றில் இம்மாதம் அந்த சம்பவம் நடைபெற்றதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நடிகை சம்பவம் நடப்பதற்கு முன்னரே Gerardக்கு அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது.

தன் மீதான பாலியல் ரீதியான தாக்குதலால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாலியல் புகார் கூறப்பட்டதால் Gerardம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தான் குற்றமற்றவன் என்று கூறி தன் மீதான புகாரை மறுத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்