பிரான்சில் தேவாலயத்தில் நிர்வாணமாக நின்ற நடிகையால் பரபரப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் புகழ்பெற்ற தேவாலயத்தில் நடிகை ஒருவர் நிர்வாணமாக நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளைச் சேர்ந்த நடிகை Deborah de Robertis. இவர் கடந்த சனிக்கிழமையன்று லூர்து தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பலர் முன்னிலை தனது ஆடைகளை களைந்த Deborah, அங்கிருந்த குகையின் வாயிலில் நிர்வாணமாக நின்றார். அவரது தலையில் நீல நிற துண்டு ஒன்றை மட்டுமே அணிந்திருந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் நிர்வாணத்தை மறைக்க முற்பட்டனர். மேலும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்திற்கு விரைந்த பொலிசார் உடனடியாக நடிகையை கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

Deborah de Robertis ஏற்கனவே லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியத்தின் முன்பு நிர்வாணமாக நின்றதால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers