பள்ளி முதல் நாளில் மாணவர்களுக்கு இம்மானுவல் மேக்ரான் கொடுத்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நேற்றைய தினம் பிரான்சில் பள்ளிகள் திறந்த நிலையில் பள்ளி சென்ற சுமார் 12 மில்லியன் மாணவர்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் முதல் நாளே பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆம் பிரான்ஸ் பள்ளிகளில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆரம்பப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் இனி செல்போன் பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதியை எப்படி அமுல்படுத்துவது, போனை அணைத்து வைப்பதா அல்லது லாக்கரில் வைத்து பூட்டுவதா என்பது போன்ற விடயங்களை அந்தந்த பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம்.

சில மாகாணங்களில் 25 மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் இரண்டாக பிரிக்கப்பட்டு இனி வகுப்பு ஒன்றிற்கு 12 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த மாற்றம் ஆசிரியர்களால் வரவேற்கப்பட்டாலும் இதில் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.

சில பள்ளிகளில் இப்படி இரண்டாக பிரிக்கப்பட்ட மாணவர்களை அமர வைத்து படிக்க வைப்பதற்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என்பதுதான் அது.

ஆறு வயது மாணவர்களுக்கு இனி தினமும் டிக்டேஷன் வார்த்தைகள் கொடுக்கப்படும்.

6,7 மற்றும் 11 வயது மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பிரெஞ்சு மொழி மற்றும் கணித தேர்வுகள் வைக்கப்படும்..

நாடு குறித்த மற்றும் நீதி போதனை பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இனி மாணவர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் தான் வகுப்புகள் நடத்தப்படும், புதன் கிழமை பெரும்பாலான மாகாணங்களில் பள்ளிகள் இயங்காது.

இது அதிக நேரம் பள்ளிகளில் இருந்து நேரத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்களை பாதிக்கும்.

பிரெஞ்சு மொழியில் எழுத்து மற்றும் பேச்சுப் புலமையை மனதில் கொண்டு நடத்தப்பட இருக்கும் புதிய baccalaureate தேர்வுகளுக்காக பிரான்சின் 15 வயது மாணவர்கள் ஆயத்தமாக வேண்டும்.

பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் வரவேற்பும் இருக்கிறது எதிர்ப்பும் இருக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers