பிரான்சில் கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

Report Print Kabilan in பிரான்ஸ்
435Shares
435Shares
lankasrimarket.com

பிரான்சின் Seine-et-Marne நகரில் பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Seine-et-Marne நகரில் உள்ள Combs-la-Ville ரயில் நிலையத்திற்கு, பெண்ணொருவர் கையில் குழந்தையுடன் திங்கட்கிழமை வந்துள்ளார்.

குறித்த பெண் RER D எனும் ரயில் வந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக, தனது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தாயும், குழந்தையும் உயிரிழந்தனர்.

இதனால், அப்பகுதி மிகவும் பரபரப்பாகியது. அதன் பின்னர் தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், மரணமடைந்த தாய், குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதனால் Villeneuve-Saint-Georges-யில் இருந்து Melun வரையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட பெண் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்