ஏஞ்சலா மெர்கலை சந்திக்கும் இம்மானுவல் மேக்ரான்: காரணம் என்ன?

Report Print Kabilan in பிரான்ஸ்

ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானும் அகதிகள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸின் Marseille நகரில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோரின் சந்திப்பு, வரும் 7ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில், ஐரோப்பாவின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ள அகதிகள் பிரச்சனை குறித்தும், யூரோ பெறுமதி, ஐரோப்பாவுக்கான தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று லக்ஸம்பெர்க்கிற்கு பயணம் மேற்கொள்ளும் மேக்ரான், அங்கு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாட்டு பிரதமர்களை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் ஏஞ்சலா மேர்க்கலை சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த சந்திப்பு Marseille நகரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்