அகதிகளைக் கடத்திய கடற்படை கேப்டன் உட்பட மூவர் பிரான்சில் கைது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஓய்வுபெற்ற பிரித்தானிய கடற்படை கேப்டன் உட்பட மூன்று பிரித்தானியர்கள் அகதிகள் சிலரை பிரித்தானியாவுக்கு கடத்திச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

வியட்நாமைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அகதிகளை ஆங்கிலக் கால்வாய் வழியாக கடத்துவதற்காக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு படகில் பயணித்தபோது அவர்கள் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கினர்.

Ronald Scott (70) என்னும் அந்த கடற்படை கேப்டனுக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் 10 ஆண்டுகள் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உதவிய மற்ற இருவரில் ஒருவருக்கு ஒரு ஆண்டும் இன்னொருவருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்வதற்கு Ronald Scottக்கு 8000 யூரோக்கள் வரை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வியட்னாமிய அகதிகள் தங்கள் உறவினர்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் இருப்பதால் அங்கு சென்று ஒரு புது வாழ்வை துவங்கலாம் என்று எண்ணி வந்ததாக தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் பிரான்ஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers