பிரான்சில் ஏராளாமான அகதிகள் வெளியேற்றம்! பிரித்தானியா நோக்கி செல்ல தங்கியிருந்ததாக தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் முகாமிட்டு தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட அகதிகளை அதிகாரிகள் நேற்று வெளியேற்றியுள்ளனர்.

பிரான்சின் dunkerque நகரில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி செல்ல தங்கியிருந்துள்ளனர்.

பொலிசார், அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 200 அதிகாரிகள் இந்த வெளியேற்றத்தில் ஈடுபட்டனர்.

வெளியேற்றப்பட்ட 539 பேரில் 40 பேர் சிறுவர்கள் எனவும் 150 பேர் குடும்பத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகதிகளில் 95 வீதமானவர்கள் ஈராக் மற்றும் குர்தீஸ் நாட்டு குடியுரிமை கொண்டவர்கள் எனவும், மிக அமைதியான முறையில் இந்த வெளியேற்றம் நடைபெற்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கலே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம் மொத்தமாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers