பாரிசில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட தகவல்கள்

Report Print Kabilan in பிரான்ஸ்
129Shares
129Shares
lankasrimarket.com

பிரான்சின் பாரிஸ் நகரில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் மிக மோசமாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டு கொள்ளையில் ஈடுபடுவது -8.8 சதவிதம் குறைந்துள்ளது எனவும், ஆயுத முனையில் இடம்பெறும் கொள்ளைகள் மிகப்பெரிய அளவில் -17.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கார் கடத்தல்கள் -4.8 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், இவை அனைத்து பிரான்சின் அனைத்து பகுதிகளிலும் சேர்த்து தான் என்ற போதிலும், பாரிஸ் நகரில் நிலைமை மிக மோசமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் Gerard Collomb தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரான்சில் திருட்டுகள், ஆயுதங்களால் மிரட்டி கொள்ளையிடுதல் போன்றவை கணிசமாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டில் ஜனவரியில் இருந்து ஜூலை வரையிலான முதல் ஏழு மாதங்களில், பொது சொத்துக்கள் சேதமாக்கப்படுவதில் -3.9 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவான எண்ணிக்கை’ என தெரிவித்துள்ளார்.

பாரிசில் கொள்ளைச் சம்பவங்கள் +6.3 சதவிதத்திலும், மக்களின் மீதான வன்முறை தேசிய அளவில் +5.7 சதவிதத்திலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்