பிரான்சில் காணாமல் போன பிரித்தானிய கால்பந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
268Shares
268Shares
lankasrimarket.com

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்காக பிரான்ஸ் சென்ற நிலையில் அங்குள்ள ஏரி ஒன்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட பரிதாப சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Halifax Elite Rugby Academyயைச் சேர்ந்த HarrySykes (16) கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்காக தனது அணியினருடன் பிரான்ஸ் சென்றிருந்தார்.

இந்நிலையில் புதனன்று அவர் திடீரென காணாமல் போனார்.

பொலிசார் அவரை மும்முரமாக தேடி வந்த நிலையில் Carcassonne என்ற இடத்திற்கருகில் உள்ள ஒரு ஏரியிலிருந்து அவரது உயிரற்ற உடல்கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் முடிவுகள் வந்தால் மட்டுமே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்