பிரான்சில் குழந்தையை 7-வது மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூர தாய்! நீதிமன்றம் வழங்கிய தண்டனை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பத்து மாத குழந்தையை ஏழாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 17-ஆம் வட்டாரத்தில் இருக்கும் பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் திகதி Raphael என்ற 10 மாத குழந்தையை அவரின் தாயான Myriam D(32) 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.

இதில் குழந்தை சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி துடித்து இறந்தது.

இதையடுத்து பொலிசார் Myriam D-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

அப்போது அவர், நானும் எனது குழந்தையும் பாய்வதாக தான் எண்ணியிருந்தோம். என்னை ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. அதனாலே தான் அவனை போகவிட்டேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த 6-ஆம் திகதி பரிஸ் Assize நீதிமன்றத்தில் வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்