பிரான்சில் துப்பாக்கியை காண்பித்து கொள்ளையடிக்க முயற்சித்த நபர்! விசாரணையில் வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் போலித் தூப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளையடிக்க முயற்சித்த நபர் பிடிபட்டதால், அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Avenue Montaigne-ல் இருக்கும் Louis Vuitton என்ற ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், நேற்று மர்ம நபர் உள்ளே நுழைந்து,போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார்.

அதன் பின் அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய் பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

இதையடுத்து உடனடியாக பொலிசார் அழைக்கப்பட்டனர்.

அதன் பின் பொலிசார் அங்கிருந்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers