பாரீசில் கத்திக்குத்து தாக்குதல்: பிரித்தானிய பயணிகள் உட்பட 7 பேர் காயம்!

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்ம நபர் ஒருவர், கத்தி மற்றும் இரும்பு கம்பியை கொண்டு தாக்குதல் நடத்தியதில், பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பாரிஸின் வட கிழக்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர், இரண்டு ஆண்களையும், ஒரு பெண்ணையும் கத்தியால் குத்த தொடங்கியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பந்துகளை கொண்டு மர்ம நபர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

உடனடியாக அங்கிருந்து தப்பிய மர்ம நபர், மற்றொரு பகுதியில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இருவரை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளான்.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிரமான விசாரணையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers