யுத்தத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள்: விளக்கும் பிரான்ஸ் புகைப்படக் கண்காட்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இரு நாடுகளுக்கிடையேயான யுத்தமோ, அல்லது உள்நாட்டு யுத்தமோ, உயிரிழப்பவர்கள் ராணுவ வீரர்கள் மட்டுமல்ல பொது மக்களும்தான்.

பொதுமக்கள் வாழும் இடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தக்கூடாது என விதிகள் இருந்தாலும் யுத்தம் அவற்றிற்கெல்லாம் செவிமடுப்பதில்லை.

எந்த நாடாக இருந்தாலும் பொதுமக்களும், அதிலும் குறிப்பாக கள்ளமறியா பிஞ்சுக் குழந்தைகளும் பாதிக்கத்தான் படுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக பிரான்சில் ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

போரால் அவதிப்படும் பொதுமக்களின் துயர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரான்சில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படங்களில் ஏமன் மற்றும் காஸாவில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்