பிரான்ஸ் விமான நிலைய ஓடுபாதையில் நுழைந்த கார்: விமானங்கள் ரத்து

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் Lyon விமான நிலையத்தின் ஓடுபாதையில் திடீரென்று கார் ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Saint Exupery விமான நிலையத்தில் வெள்ளை நிற கார் ஒன்று ஓடும் வீடியோ ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வெளியானது.

சற்று சேதமடைந்த அந்த காரை பல பொலிஸ் வாகனங்கள் துரத்திச் செல்வதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

தடுப்புச் சுவர் ஒன்றில் மோதி அந்த கார் நிற்க, அதிலிருந்து ஒரு நபர் இறங்கி ஓடுகிறார். உடனே பொலிஸ் வாகனங்களில் வந்த பொலிசார், வாகனங்களை விட்டிறங்கி அவரைத் துரத்திப் பிடிக்கின்றனர்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அந்த காரை ஓட்டிய குறிப்பிட்ட நபர் தவறான திசையில் காரை செலுத்தியதாகவும், பல விபத்துக்களை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அல்லது மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers