ஒரே வீட்டில் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் சடலங்கள்.. உயிருக்கு போராடும் மற்றொரு சிறுமி! பிரான்சில் சம்பவம்

Report Print Kabilan in பிரான்ஸ்
188Shares
188Shares
lankasrimarket.com

பிரான்சில் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் மற்றும் உயிருக்கு போராடும் சிறுமி ஆகியோர் ஒரே வீட்டில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Saint-Genis-Pouilly பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு வயது மற்றும் 6 வயது சிறுமிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டதால் இறந்து கிடந்ததுள்ளனர். மேலும் 11 வயதுமிக்க மற்றொரு சிறுமி கழுத்தில் வெட்டப்பட்டதால் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமிகளின் தாயாரும் அங்கே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவர்களை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்ததனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறுமிகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் முடிவு இன்று வெளியாகும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்