பிரான்ஸ் ஸ்பைடர்மேனை நினைவிருக்கிறதா? அவர் இப்போது பிரான்ஸ் குடிமகன்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என பட்டப்பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட மாலி அகதியான Mamoudou Gassama பிரெஞ்சுக் குடிமகனாக ஆகிவிட்டதாக அரசாணை ஒன்று தெரிவிக்கிறது.

மே மாதம் அவர் சட்டப்படி பிரான்சில் வாழும் உரிமம் பெற்றதோடு தீயணைப்புப் படையில் வேலையும் பெற்றார்.

நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்றில் ‘இந்த வீரதீரச்செயல் தைரியம், தன்னலமற்ற தன்மை, பிறரின் மகிழ்ச்சிக்காக தன்னையே தியாகம் செய்தல் மற்றும் ஆபத்திருப்பவர்களுக்கு உதவுதல் போன்ற நமது சமூகத்தை இணைக்க உதவும் குணாதிசயங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பிரான்சில் வசித்து வந்த Gassama, ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு அசாதாரண வீடியோவால் உலகப் புகழ் பெற்றார்.

அபாயகரமாக மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு நான்கு வயது சிறுவனை கையில் எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தாவித்தாவி ஏறி சென்று மீட்டார் Gassama.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும், மாலி அதிபர் Ibrahim Boubacar Keitaவும் Gassamaவை நேரில் வரவழைத்து பாராட்டினர்.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட Gassamaவுக்கு அங்கீகாரம் அளித்ததற்காக, பிற அகதிகளை மோசமாக நடத்திவிட்டு அவருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்ததாக, பிரான்ஸ் அரசாங்கம் மாய்மாலம் செய்கிறது என கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் Gassamaவுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்