பிரான்சில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்! பொலிசாரிடம் சொன்ன காரணம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மனைவி தன்னிடம் கத்தியை காண்பித்து தொடர்ந்து மிரட்டியதால், நான் அதை பிடுங்கி அவரை குத்தியதாக கணவன் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்திருக்கும் Champigny-sur-Marne பகுதியில் விவாகரத்து பெற்ற கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் பழங்கள் வெட்ட மேசைமீது வைத்திருந்த கூரான கத்தி மூலம் மனைவியை குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது மனைவியின் சகோதரி அங்கிருந்ததால், அவர் தடுக்க முயற்சித்துள்ளார். அவரையும் கணவர் தாக்கியுள்ளார். இதனால் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களிலே மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். உடன் இருந்த சகோதரிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் காரணமாக கணவரை கைது செய்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவி கத்தியை காண்பித்து தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகவும், அதன் பின்னரே நான் மனைவியிடமிருந்த கத்தியை பறித்து அவரை குத்தியதவும் தெரிவித்துள்ளார். பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers