ரபேல் ஒப்பந்த விவகாரம்: விளக்கம் அளித்த பிரான்ஸ் அரசு

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டேவின் கருத்துக்கு பிரான்ஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை கொடுத்து மத்திய அரசு வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன் அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக மோடி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினர், இந்த கருத்தையே வலியுறுத்தும் விதமாகவும் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே பேசினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விளக்கம் அளித்துள்ள பிரான்ஸ் அரசு, இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவில் பிரான்ஸ் அரசு எடுக்கவில்லை, இது பிரான்ஸ் வர்த்தக நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை, இதில் அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்