பிரான்சின் முக்கிய நகருக்கு புயல் எச்சரிக்கை!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் இல்-து-பிரான்ஸ் நகரில் அடைமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இல்-து-பிரான்ஸில் இன்று காலையில் இருந்து கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், நண்பகலுக்கு பின்னர் கடுமையான புயல் காற்று வீசும் என்றும், இதனால் அடைமழை பொழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலானது, மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் இருந்து 90 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று நள்ளிரவு வரை இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நகரில் மின் தடை ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்