பிரான்சில் தலைமை பொலிஸ் அதிகாரி குத்திக் கொலை: நாயால் வந்த பிரச்சினை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தென் பிரான்ஸ் நகரமான Rodez நகரில் பட்டப்பகலில் ஒரு தலைமை பொலிஸ் அதிகாரி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pascal Filoe என்னும் அந்த அதிகாரி சமீபத்தில் ஒரு நபரின் நாயை பறிமுதல் செய்தார்.

அந்த நாய் தாக்குதல் நடத்தும் வகையைச் சேர்ந்ததாகும். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஏற்கனவே அந்த பொலிஸ் அதிகாரியையும் மேயரையும் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த நபர் தெருவில் வைத்து Pascal Filoeவை கத்தியால் நெஞ்சில் குத்தினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் காயம் காரணமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்துள்ள பிற அலுவலர்களுக்கு அவசர கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது.

Pascal Filoeவை கத்தியால் குத்திய நபரை முனிசிபல் அலுவலர் ஒருவர் துரத்த, பக்கத்திலிருந்த ஒரு கடைக்குள் சென்று அவர் மறைந்து கொண்டதாகவும், பொலிசார் அங்கு சென்று அவரைக் கைது செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்