செல்வாக்கு பெற பணம் கொடுக்க விரும்பவில்லை: இம்மானுவல் மேக்ரான் அதிரடி கருத்து

Report Print Kabilan in பிரான்ஸ்

எந்த கருத்துக் கணிப்புகளும் என்னை தடுத்து நிறுத்துவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் இம்மானுவல் மேக்ரான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து, பல்வேறு நிறுவனங்கள் அவரது நன்மதிப்பு குறித்து கருத்துக்கணிப்பு மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், பலர் இதுபோன்ற தொடர்ச்சியான கருத்துக்கணிப்புகளில் பல்வேறு சம்பவங்களை காரணம் காட்டி, மேக்ரானின் செல்வாக்கு சரிந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதன் முறையாக தன் மீதான கருத்துக்கணிப்பு குறித்து ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கருத்துக்கணிப்பு என்னை பாதிப்பதில்லை. நீண்ட காலத்தின் பின்னர் நிலைத்து நிற்கும் முடிவுகளிலேயே நான் நம்பிக்கையுற்றிருக்கிறேன்.

கருத்துக்கணிப்பில் செல்வாக்கு பெற மக்களுக்கு பணம் கொடுத்தால் போதும். ஆனால், நான் அதுபோன்று செயற்பட விரும்பவில்லை. நான் அதே வேகத்தில் செயற்படுவேன்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்