சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இம்மானுவல் மேக்ரான் புகைப்படம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானின் சமீபத்திய புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், ஓர் ஆண்டிற்கு முன்பு சூறாவளியால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்புநிலைக்கு திரும்பிய Saint-Martin தீவிற்கு, நேற்று முன்தினம் சென்றிருந்தார்.

அப்போது அந்த தீவின் சொல்லிசை பாடகர், மற்றொரு நபர் ஆகியோருடன் இணைந்து மேக்ரான் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், இந்த புகைப்படத்தில் மேக்ரானுடன் இருக்கும் நபர் மேலாடை இன்றி, தவறான செய்கையை குறிக்கும் நடுவிரலை காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக இந்தப் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அரசியல் பிரமுகர்கள் தங்களது விமர்சன கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மரீன்-லூ-பென் எனும் அரசியல் தலைவர் இதுகுறித்து கூறுகையில், ‘இது பிரான்சின் மிகப்பெரிய அவமானம். எனது கோபத்தை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. பிரான்ஸ் நிச்சயம் இதை மறக்காது’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் Valerie Boyer கூறுகையில், ‘நீங்கள் பண்பாக நடந்துகொள்ள வேண்டும். என்னை மனு என அழைக்கக்கூடாது. திரு.ஜனாதிபதி என அழைக்க வேண்டும் என மேக்ரான் தெரிவித்திருந்தது கூட முரண்பாடாக தெரிகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers