இந்தோனேஷியா Lombok தீவில் உள்ள விமானநிலையத்தில் நேற்று பிரெஞ்சு நபர் ஒருவர் நான்கு கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு பிரான்சான Bethune நகரைச் சேர்ந்த Félix Dorfin எனும் நபர், செப்டம்பர் 30 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு அடுக்குகள் கொண்ட தனது பையின் அடியில் 4 கிலோ போதைபொருளை மறைத்து வைத்து விமானநிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுங்க அதிகாரிகள் சோதனையிட முற்பட்டபோது குறித்த நபர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளர் என அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மேலும் இந்தோனேஷியாவில் முன்னதாக இரண்டு பிரெஞ்சு நபர்கள் இதேபோன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.