பிரான்ஸின் உள்துறை அமைச்சர் பதவி விலகல்

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்ஸின் உள்துறை அமைச்சரான Gerard Collomb பதவி விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை வரை Gerard Collomb, லியோன் நகர முதல்வராக பதவி வகித்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு உள்துறை அமைசர் Gerard Collomb, தனது பதவி விலகல் கடித்தத்தை மக்ரோனிடம் சமர்ப்பித்து அதை மக்ரோன் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியது.

நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் Gerard Collomb, ஜனாதிபதியிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்து கடிதத்தை சமர்ப்பித்ததாகவும், அதை மக்ரோன் ஏற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு மிகவும் பிடித்தமான இந்த பதவிக்கு மீண்டும் போட்டியிடவே பதவி விலகுவதாக சொல்லப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் மீண்டும் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers