இது மிகவும் வருத்தமளிக்கிறது: உருக்கமான பேச்சுடன் வெளியேறிய பிரான்ஸ் உள்துறை அமைச்சர்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் உள்துறை அமைச்சரான Gerard Collomb, தான் மிகவும் வருத்தத்துடன் வெளியேறுவதாக கூறி பிரியாவிடை பெற்றார்.

பிரான்சின் உள்துறை அமைச்சரான Gerard Collomb இன்று பதவி விலகினார். முன்னதாக, பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,

‘இந்த அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது மிக வருத்தமளிக்கின்றது. மிகவும் அமைதியான அமைச்சகத்தில் இருந்து நான் வெளியேறுகிறேன்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பேசிய பிரதமர் எத்துவா பிலிப் கூறுகையில், ‘இந்த 16 மாதங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றியமைக்கு நான் நன்றி கூற வேண்டும். பிரெஞ்சு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது அனைத்தும் Gerard Collomb-ஐ சாரும்’ என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பலத்த பாராட்டுக்களை பெற்ற பின் Gerard Collomb, Place Beauvau-யில் வெளியேறினார்.

Reuters

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers