பாரீஸில் தெருவில் வைத்து இளம்பெண்ணை அறைந்த நபருக்கு சிறை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
260Shares
260Shares
ibctamil.com

பாரீஸ் தெரு ஒன்றில் இளம்பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த நபருக்கு நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பாரீஸ் தெரு ஒன்றில் நடந்துபோகும்போது Marie Laguerre(22) என்ற இளம்பெண்ணை ஒரு நபர் ஆபாசமாக கமெண்ட் அடித்தான்.

அவரைப் பார்த்து Marie வாயை மூடிக் கொண்டு போ, என்று கத்த, அந்த நபர் அருகிலிருந்த சாலையோர உணவகம் ஒன்றிலிருந்த ஆஷ் ட்ரேயைத் தூக்கி அவர் மீது வீசினான்.

பின் அவளைப் பார்த்து கத்தியவாறே அவளை நெருங்கி அவ்லது கன்னத்தில் பளாரென அறைந்தான்.

அப்போது அதிர்ந்துபோன Marie அங்கிருந்து சென்றுவிட்டாலும், பின்னர் அந்த உணவகத்தை அணுகி அங்கு வைக்கப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்த காட்சியை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

இச்சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றம் வரை சென்ற அந்த தகவல், பெண்களுக்கு எதிராக இது போன்ற வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கண்ட இடத்தில் அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை அளிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை நிறைவேற்றுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த வழக்கை கையில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அவனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அளித்ததுடன் Marieக்கு 2000 யூரோக்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நபருக்கு உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, Marieயை சந்திக்க அவனுக்கு தடை வித்ததுடன் பாலியல் வன்முறை தொடர்பான வகுப்புகளுக்கு செல்லவும் அவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவன் மீண்டும் இதேபோல் குற்றமிழைத்தால் இன்னொரு ஆறு மாதங்கள் சிறை செல்ல நேரிடும் என்றும் அவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்