பிரான்சில் இந்த பகுதியில் கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள்! அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மக்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கிராமம் ஒன்றில் கைகள் இன்றி குழந்தைகள் பிறப்பதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பிரான்சின் Ain மாவட்டத்தில் இருக்கும் Bourg-en-Bresse பகுதிக்கு அருகில் உள்ள Druillat எனும் சிறிய கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இந்த கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 7 குழந்தைகள் இது போல் கைகள் இன்றி பிறந்துள்ளன. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அக்கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

இக்கிராமத்துக்கு அருகே 20 கிலோமீற்றர் தொலைவில் மின்சார அணு உலை இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற ரீதியிலும் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கைகள் இல்லாமலும், சில குழந்தைகள் கண்கள் வீங்கி, கன்னங்கள் சுருங்கி விகாரமாகவும் பிறக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. காரணம் தெரியாத இந்த சமவத்தினால் அயல் கிராமங்களில் உள்ள மக்களும் பயத்தில் உள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்