இண்டர்போல் தலைவர் மாயம்: தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
188Shares
188Shares
ibctamil.com

பிரான்சை தலைமையகமாகக் கொண்ட இண்டர்போலின் தலைவரான சீனாவைச் சேர்ந்த Meng Hongwei (64) திடீரென மர்மமான முறையில் மாயமாகியிருக்கும் நிலையில் பிரான்ஸ் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இண்டர்போல் பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

மனித இனத்துக்கு எதிரான சர்வதேசக் குற்றங்கள் மற்றும் மனித சமுதாயத்தின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இண்டர்போலின் தலைவராக முதன் முறையாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இண்டர்போலின் தலைவராக இருக்கும் ஒருவரே காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டர்போலின் தலைமையகம் அமைந்துள்ள பிரான்ஸ் நகரமாகிய Lyonஇல் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட அவர் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார்.

EPA

இதற்கிடையில் சீனப்பத்திரிகை ஒன்று Meng Hongwei சீனா வந்திறங்கியதும், சீன ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சீனச் சட்டப்படி அப்படி பிடித்துச் செல்லப்படும் நபரின் குடும்பத்திற்கு அதைக் குறித்து தகவல் சொல்லப்பட வேண்டும்.

ஆனால் Meng Hongweiயின் மனைவிக்கு தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.

தன் கணவர் திடீர் என மாயமானதால், கணவரைக் காணவில்லை என அவர் பிரான்ஸ் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

சீனாவைப் பொருத்தவரை, திடீரென ஒரு அதிகாரி காணாமல் போவார், பொதுமக்கள் அவரைக் காணவில்லை என புகாரளிப்பார்கள், அதைத் தொடர்ந்து சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த அதிகாரி விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிடும், ஒழுங்கு நடவடிக்கை என்று கூறி அந்த அதிகாரி கட்சியிலிருந்து நீக்கப்படுவார், பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

2012ஆம் ஆண்டு Xi Jinping ஆட்சிக்கு வந்ததிலிருந்து சீனாவில் இது சகஜமாக நடக்கும் ஒன்று, இதுவரை பல மில்லியன்பேர் இதுவரை இதுபோல் ‘ஒழுங்கு நடவடிக்கைக்கு’ ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படியென்றால் Meng Hongwei எதற்காக ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்?

எந்த விதத்தில் அவர் சீன அரசைக் கோபப்படுத்தினார்?

எதனால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்?

எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்?

இவற்றில் எந்த கேள்விக்கும் சீன அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இதற்கிடையில் சீன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ், இண்டர்போலின் தலைவர் காணாமல் போனதால் குழப்பமடைந்துள்ளதாகவும் அவரது மனைவிக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது தவிர வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்