பிரான்சில் பல வீடுகளில் கைவரிசை காட்டிய பெண்கள்! அதிரடியாக கைது செய்த பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்
374Shares
374Shares
ibctamil.com

பிரான்சில் வீடுகளில் திருடியிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரான்சின் லியோன் நகரில் உள்ள இரண்டாம் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் 75 வீடுகளுக்கு மேல் திருடியவர்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்படுவதற்கு முன் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திருடியுள்ளனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து அவர்களை சுமார் 20 பேர் கொண்ட காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடந்த ஆறு மாத காலமாக காவல்துறையினர் இவ்விரு பெண்களையும் பின் தொடர்ந்துள்ளனர். லியோனின் இரண்டாம் மற்றும் ஆறாம் வட்டாரங்களில் சில நாட்கள் இடைவெளிகளில் தொடர்ச்சியாக திருடிக்கொண்டே இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்