ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்கு கஞ்சா கடத்திய 71 வயது நபர்! 9 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் 71 வயது முதியவர் ஒருவருக்கு, ஸ்பெயினில் இருந்து கஞ்சா கடத்தியதற்காக 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கஞ்சா கடத்தும் குற்றத்திற்காக நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் ஸ்பெயினில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது சகாக்களுடன் சேர்ந்து, ஆண்டுக்கு 4 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை கடத்தி வந்ததாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1,50,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தில், குறித்த நபருக்கு உதவியாக செயல்பட்டவருக்கு ஏற்கனவே 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers