பிரான்சில் இளம் பெண்ணை கொம்பால் தூக்கி வீசிய காளை! பரிதாபமாக இறந்த சோகம்

Report Print Santhan in பிரான்ஸ்
216Shares
216Shares
ibctamil.com

பிரான்சில் பெண் ஒருவரை காளை கொம்பால் குத்தி தூக்கி வீசியதால், அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

பிரான்சின் Aigues-Mortes பகுதியில் நேற்று விருந்துபசார விழா நடந்துள்ளது. அப்பொது இளம் பெண் ஒருவரை காளை குத்தி தூக்கி வீசியுள்ளது.

இதனால் அந்த பெண் பெண் கீழே விழுந்ததில் தலை அடிபட்டதால், இரத்தம் வெளியேறியுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கு SAMU மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ஆனால் பலமாக அடிபட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து SAMU வாகனத்தில் அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அப்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இத்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிவிக்கப்பட்டு, அவரும் வரவழைக்கப்பட்டார். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்