காணாமல் போன இண்டர்போல் தலைவர் லஞ்சம் பெற்றதாக சீனா குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
117Shares
117Shares
ibctamil.com

சென்ற வாரம் பிரான்சில் அமைந்துள்ள இண்டர்போல் தலைமையகத்திலிருந்து சீனா சென்ற இண்டர்போல் தலைவர்மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சீனா சுமத்தியுள்ளது.

இண்டர்போலின் தலைவரான Meng Hongwei லஞ்சம் பெற்றதாக சீன பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Meng Hongweiஇன் சகாக்களையும் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தன்னிச்சையாக முடிவுகளை அவர் எடுப்பாரானால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதற்கு அவர்தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சட்டத்தை மீறியதற்காக Meng Hongwei விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இண்டர்போலுக்கு Meng Hongweiஇன் ராஜினாமா கடிதம் வந்து சேர்ந்தது. சர்வதேச அளவில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தனது நாட்டவர் ஒருவரை கைது செய்தால் உலக நாடுகளின் முன் தங்கள் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்பது நன்கு தெரிந்தும் சீனா இப்படி ஒரு நடவடிக்கையை உடனடியாக எடுத்திருக்கிறது என்றால், அது சாதாரண ஒரு ஊழல் குற்றசாட்டாக இருக்க முடியாது, ஏறு ஏதோ பெரிய பிரச்சினை இருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் Meng Hongweiஇன் மனைவி தனக்கு செப்டம்பர் 25ஆம் திகதி தனது கணவரிடமிருந்து ஒரு செய்தி வந்ததாகவும் அதில், எனது அழைப்புக்காக காத்திரு என்று கூறப்பட்டுள்ளதோடு, ஆபத்து என்பதைக் குறிக்கும் விதமாக ஒரு கத்தி இமோஜியும் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் முன் புகாரளித்துள்ளார்.

Meng Hongweiயின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் அரசு அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்