பிரான்சின் முக்கிய நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு! பெரும் பரபரப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Champs-Elysees நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸின் Champs-Elysees நகரில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் Smart Fortwo கார் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் காரை ஓட்டி வந்த Sofiane Hamli என்ற நபரின் தலையில் குண்டு பாய்ந்தது. மேலும், காரின் மீதும் குண்டுகள் பாய்ந்தன. அத்துடன் காரின் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவரும் படுகாயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் நடந்த விசாரணையில் Sofiane பிரபலமான கொள்ளையர் என்பதும், சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சிறிது காலத்திலேயே அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers