பிரான்சில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது: அவர்களிடம் எவ்வளவு யூரோக்கள் கைப்பற்றப்பட்டது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
363Shares
363Shares
ibctamil.com

பிரான்சில் பல மாவட்டங்களில் உள்ள 98 வீடுகளில் கொள்ளையடித்த ஆறு கொள்ளையர்களை ஜோந்தாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை Bergerac பகுதியில் ஆறு கொள்ளையர்கள் பிடிபட்டனர். இவர்கள் தென் மேற்கு மாவட்டங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஆல்பேனிய நாட்டு குடியுரிமை கொண்டவர்கள். clan des Albanais என தங்கள் குழுவுக்கு பெயர் சூட்டிக்கொண்டு, இதுவரை 98 வீடுகளில் திருடியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து €423,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு குறித்த பகுதிக்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஜோந்தாமினர்கள், குறித்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.

அவர்களில் மூன்று பேர் ஆண்கள் எனவும், மூன்று பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கள், நகைகள், பணம், தங்கக்காசுகள் உட்பட ஆயுதங்களும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்