பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வீதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 3000 அகதிகள் மற்றும் வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக கணக்கெடுக்கப்பட்டது.

இதனால் இவர்களில் 700 பேர் பாரிசில் தங்கக்கூடிய வகையில் இடம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு 900-பேர் தங்கக்கூடிய முகாம் ஒன்று ஜனவரி மாதத்தில் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, தற்போது வீடற்றவர்கள் இந்த குளிர் காலத்தில் தங்குவதற்காக மேலும் சில முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாக நகர மண்டபத்திலும் ஒரு பகுதி தங்குமிடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பாரிசில் இருக்கும் Hôtel de Ville-இல் நவம்பர் மாத இறுதியில் பெண்களுக்கான தங்குமிடமாக ஒரு பகுதி அமைக்கப்பட உள்ளது.

தனித்து வாழும் பெண்களில், 50 பேர் வரை இங்கு தங்கவைக்கபப்ட உள்ளனர். பாரிஸ் நகர மண்டபம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவது இதுவே முதன் முறை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்