மதுபோதையில் காவல் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பெண்மணி கைது

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரமான Toulouse நகரின் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் அதிகரியை மதுபோதையில் பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை 2.40 மணி அளவில், பெண் ஒருவரை சோதனை மேற்கொள்ளுவதற்காக நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மதுபோதையில் குறித்த பெண் காவல்துறையினரிடம் மிக கோபமாக திட்டியும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் உள்ளார். அத்தோடு நிற்காமல், காவல்துறை அதிகாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளியுள்ளார்.

காவல்துறையினரிடம் மோசமாக நடந்து கொண்ட காரணத்தினால் அப்பெண் உடனடியாக கைது செய்யப்பட்டு (30 வயது) காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அப்பெண்மணி குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...