பாரிசில் வீடற்றோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பாரிஸ் நகரில் வீடு இன்றி வீதிகளில் உறங்குபவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பிரான்சில் வீடற்றவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி வெளியான கணக்கின்படி, பாரிஸ் நகரில் மட்டும் 21,185 பேர் வீடுகளின்றி வீதிகளில் படுத்து உறங்குவதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் 18,150 பேருக்கு பாரிசில் தங்குமிடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 3,085 பேர் வீதிகளில் படுத்து உறங்குவதாக தெரிய வந்துள்ளது.

வீடற்று உள்ளவர்களில் 88 சதவிதம் ஆண்கள் என்றும், 12 சதவிதம் மாத்திரமே பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள தங்குமிடம் அற்றவர்களுக்கு இடம் அமைத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்