எட்டுமாத கர்ப்பிணிக்கு கத்திக்குத்து: பிரான்ஸ் வீதியில் அரங்கேறிய கொடூரம்

Report Print Kavitha in பிரான்ஸ்

Limay ( Yvelines) நகரில் எட்டுமாத கர்ப்பிணி பெண்ணை ஒரு பெண் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நண்பகலுக்குப் பின்னரே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் குறித்த கர்ப்பிணி, அவரது மகனுடன் ( 2வயது) 16:00 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.

இதன் போது அவரது வீட்டுக்கு முன்னால் பெண் ஒருவர் கத்தியுடன் காத்திருந்து கர்ப்பிணி பெண்ணையும், அவரது மகனையும் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாரான குறித்த பெண் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

குறித்த பெண் மற்றும் அவரது மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற Avenue Doctor Guilleminot வீதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு Yvelines பிராந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers