Haute Loire-யில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சிக்கிக்கொண்ட 800 வாகனங்கள்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Haute Loire பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவியதால், சுமார் 800 வாகனங்கள் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Haute Loire-யில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு 30 சென்டி மீற்றர் வரை பனிப்பொழிவு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவின் காரணமாக RD 500, RD 15, RD 44, RD 46,RD 105 ஆகிய ஐந்து வீதிகளும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சில பகுதிகளில் மின்சாரத்தடையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக, பிரான்சின் மூன்றில் ஒரு பகுதி மாவடங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், Haute Loire பகுதியில் நிலவிய கடுமையான பனிப்பொழிவால் 800 வாகனங்கள் வரை நடுவீதியில் தடைபட்டிருந்தன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்