பிரான்சில் விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விவகாரம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மேலதிகமாக கைகள் இன்றி பிறந்துள்ள 11 குழந்தைகளை, சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Ain மாவட்டத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில், 7 குழந்தைகள் இரண்டு கைகளும் இன்றி பிறந்தன. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது.

மேலும், சுகாதார அதிகாரிகள் இதுதொடர்பான காரணத்தை அறியும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில், அதே மாவட்டத்தில் தற்போது 11 குழந்தைகள் கைகள் இன்றி பிறந்துள்ளதை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விடயம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு பிறந்த குழந்தை ஒன்று 8வதாக கைகள் இன்றி பிறந்த குழந்தையாக அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், 15 வருடங்களில் 18 குழந்தைகள் கைகள் இன்றி பிறந்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், சுகாதார அதிகாரிகள் இதுதொடர்பான தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்