பிரான்சில் தனிநாடு வாக்கெடுப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் இருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரப்பிரகடணம் செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 56.9 சதவித வாக்குகள் பிரான்சிற்கு ஆதரவாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் இருந்து கலதோனியாவை தனிநாடாக பிரிப்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 284 வாக்குச்சாவடிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது 95 சதவித வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 56.9 சதவிதத்திற்கும் மேலான மக்கள் சுதந்திர நாடாவதை மறுதலித்து, பிரான்சின் மாகாணமாக வாழ்வதற்கு ஆதரவளித்துள்ளனர்.

இதனால் மீதி 5 சதவித வாக்குகள் எண்ணப்பட்டாலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என தெரிகிறது.

இந்த வாக்கெடுப்பிற்கான கண்காணிப்பு பணியில் ஐ.நா.சபை கண்காணிப்பாளர்கள், நீதிபதிகள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers