எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம்: ஒரு நாட்டு மக்கள் எடுத்த வித்தியாசமான முடிவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடான New Caledoniaவின் குடிமக்களில் பெரும்பாலானோர், தாங்கள் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற விரும்பவில்லை என வாக்களித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

New Caledoniaவில், பிரான்சுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்று தனி நாடாக திகழ்வதா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் 57 சதவிகிதத்தினர் பிரான்சுடன் இணைந்திருப்பதையே விரும்புவதாக வாக்களித்துள்ளனர்.

43 சதவிகிதத்தினர் மட்டுமே பிரான்சிடம் இருந்து பிரிந்து தனி நாடாவதை ஆதரித்துள்ளனர்.

New Caledoniaவில் வாழும் பெரும்பான்மை ஐரோப்பிய புலம்பெயர்ந்தோருக்கும் சிறுபான்மையினராக்கப்பட்டுவிட்ட பூர்வக்குடிகளாகிய Kanak பழங்குடியினருக்கும் இடையே நிலவி வரும் பூசலை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து 900 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள New Caledonia, உலகின் நிக்கல் வளத்தில் 10 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. உலக அரசியலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் New Caledonia, பிரான்சின் ஒரு முக்கிய ராணுவ தளமாகும்.

பசிபிக் பகுதியில் மெல்ல ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்த முயலும் சீனாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, New Caledoniaவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகவும் அவசியமாகும்.

இதை மனதில் வைத்தே, சமீபத்தில் New Caledoniaவுக்கு சென்றிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுடனான ஒரு புதிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் New Caledonia மக்கள் தாங்கள் பிரான்சுடன் இணைந்திருப்பதையே விரும்புவதாக வாக்களித்துள்ளனர்.

என்றாலும் இந்த பிரச்சினை இத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடவில்லை, காரணம் தொடர்ந்து 2020 மற்றும் 2022இலும் இதே காரணத்திற்காக மீண்டும் வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.

இன்னும் Kanak பழங்குடியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நிகழும் என்று இப்போதைக்கு கணிப்பது கடினமே.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers