பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீது தாக்குதல் நடத்த திட்டம்: பெண் உட்பட ஆறு பேர் கைது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீது பயங்கர தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஒரு பெண் உட்பட ஆறு பேரை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ள சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ப்ஸ் பகுதியில் ஒருவர், Brittany பகுதியில் ஒருவர் மற்றும் Moselleஇல் பெல்ஜியம் எல்லையில் நால்வர் இந்த சதித்திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரும் கூட்டாளிகளா என்பது இன்னும் வெளியாகாத நிலையில், அவர்கள் அனைவருமே மேக்ரான் மீது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மட்டும் உறுதி என நீதித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆறு பேர் குறித்த விவரங்களும், தீட்டப்பட்ட திட்டம் குறித்த தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம், முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி, வடக்கு பிரான்சின் யுத்த தளத்திற்கு இமானுவல் மேக்ரான் சென்ற நாளில் நடைபெற்றுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்