அடையாளம் தெரியாத நிலையில் மூன்று உடல்கள் மீட்பு! தொடர்ந்து பரபரப்பில் பிரான்சின் மார்செய் நகரம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் மார்செய் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மார்செய் நகரில் இரண்டு கட்டிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்தன. அதனைத் தொடர்ந்து, இவற்றிற்கு நடுவில் இருந்த மற்றொரு கட்டிடமும் பாதுகாப்பு கருதி, தீயணைப்பு வீரர்களால் இடிக்கப்பட்டது.

இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. எனினும், 8 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இடிபாடுகளுக்குள் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடையாளம் காண முடியாத வகையில் உள்ளன.

கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது, அவ்வழியாக சென்றவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அந்நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

அத்துடன் கடும் மழை மற்றும் மோசமான காலநிலை அங்கு நிலவும் நிலையிலும் மீட்பு நடவடிக்கை துரிதகதியில் தொடர்வதாக கூறப்படுகிறது.

Getty Images

REUTERS

AP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்