முதல் உலகப்போர் வீரரின் எலும்புக்கூட்டை அடையாளம் காணும் முயற்சியில் பிரான்ஸ் தடயவியல் நிபுணர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

முதல் உலகப்போரில் கொல்லப்பட்ட வீரர் ஒருவரை அடையாளம் காணும் முயற்சியில் பிரான்ஸ் தடயவியல் நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.

மார்ச் மாதத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் பள்ளம் தோண்டும்போது Verdun யுத்தத்தில் இறந்த ஒரு போர் வீரரின் உடல் கிடைத்தது.

துரதிர்ஷ்டவசமாக அவரது அடையாள அட்டையைக் காணவில்லை.

அந்த போர் வீரர் யார் என்று கண்டறியும் முயற்சியில் தடயவியல் நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.

யாராவது இவர் தன்னுடைய உறவினர் என சந்தேகிக்கும் பட்சத்தில் அவரது DNAவை வைத்து சோதிக்கலாம்.

ஆனால் இந்த விடயத்தில் அது சாத்தியமில்லை, DNA சோதனை செய்தும் பயனில்லை.

தடயவியல் நிபுணரான Dr Bruno Fremont கூறும்போது, அந்த எலும்புக்கூட்டின் மண்டையோட்டில் நூறு ஆண்டுகளுக்குமுன் shrapnel வகை குண்டு ஒன்றினால் ஏற்பட்ட துவாரம் ஒன்று இருப்பதாகவும், அதுதான் அந்த போர் வீரரைக் கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அந்த வீரர் கால்களில் அணிந்திருந்த காலணி மட்டும், பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அணியும் காலணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஒரு ஆதாரம் மட்டுமே அந்த வீரர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறிவிட போதுமானது அல்ல.

ஏனென்றால் ஒரு ஜேர்மானியர்கூட ஒரு பிரான்ஸ் வீரரின் காலணிகளை திருடி அணிந்திருக்கக் கூடும்.

Verdun யுத்தத்தில் இறந்த வீரர்களின் 80,000 உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

சுமார் 300,000 போர் வீரர்கள் Verdun யுத்தத்தில் கொல்லப்பட்ட நிலையில் ஆங்காங்கு இதுபோல் தோண்டும் நேரத்தில் எலும்புகள் கிடைக்கின்றன, அதுவும் சில நேரங்களில் உடல்கள் குண்டடிபட்டு சிதறிவிடுவதால் முழு எலும்புக்கூடும் கிடைப்பதில்லை.

தடயவியல் நிபுணர்கள் மூன்று மாதம் ஆன நிலையிலும், அந்த எலும்புக்கூட்டை அடையாளம் காணும் முயற்சியை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்