முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு தினத்திற்கு பிரான்ஸ் வருகிறார் அமெரிக்கா ஜனாதிபதி

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்ஸில் எதிர்வரும் 11ம் திகதி நவம்பர் மாதம், முதலாம் உலகப் போரில் நாசிப் படைகள் சரணடைந்த வெற்றித் தின நிகழ்வு பிரான்சின் களமுனை நகரங்கள் எங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த நூற்றாண்டின் நினைவுநிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் வருகை தருவதாக ஜனாதிபதி மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

பிரான்சின் ஜனாதிபதி மாளிகையான எலிசே மாளிகைக்கு வரும் டொனால்ட் ட்ரம்புடன், எமானுவல் மக்ரோன் பிரத்தியேகச் சந்திப்பொன்றை சனிக்கிழமை காலை மேற்கொள்ள உள்ளனர்.

அத்துடன் மெலானியா ட்ரம்பினை வரவேற்கும் பிரிஜித் மக்ரோன், அவருடன் பிரத்தியகேச் சந்திப்பினை மேற்கொண்டு அதன் பின்னர் அனைவரும் நூற்றாண்டு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த நிகழ்வுகளில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கடந்த வாரத்தில் இருந்து, முக்கிய நகரங்கள் பலவற்றில் கலந்து கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers