பிரான்சில் கொட்டும் மழையிலும் குடை பிடித்து சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்: எங்கு தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் சென்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொட்டும் மழைக்குள், குடை பிடித்த நிலையில் அங்கிருக்கும் அமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபடி டிரம்ப் கடந்த 10-ஆம் திகதி தன் மனைவி மெலானியா டிரம்புடன் முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் சென்றார்.

எலிசேயில் மக்ரோன் தம்பதியினருடன் சந்திப்பை நிகழ்த்தியதன் பின்னர் சனிக்கிழமை Suresnes கல்லறைக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சோம்ப்ஸ்-எலிசே நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்தததும், டிரம்ப், அமெரிக்க வீரர்களின் கல்லறையான Suresnes கல்லறைக்கு சென்றார்.

அங்கு குடை ஒன்றை பிடித்துக்கொண்டு அமெரிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த கல்லறையில் முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 1,541 அமெரிக்க வீரர்களின் சடலங்களும், இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த பெயர் தெரியாத 24 வீரர்களின் சடலங்களும் புதைக்கப்பட்டுள்ளன

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்